
கோலாலம்பூர், நவ 1 – சபா மாநிலம் சொந்தமாக அரிசியை இறக்குமதி செய்ய முடியாது. அரிசி விநியோகம் மற்றும் அதன் விலை சீராக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த தடை இருப்பதாக விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் முகமட் சாபு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய இறக்குமதி கொள்கையை அரசாங்கம் இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பதால் அந்த தடை இருப்பதாக அவர் கூறினார்.
தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை கையாள்வதில் நடப்பு கொள்கை சிறந்த முறையாக இருப்பதாக முகமட் சாபு தெரிவித்தார். அனைத்துலக சந்தை நிலைமை உறுதியற்றதாக இருப்பதால் உள்நாட்டின் அரிசி மற்றும் நெல் உற்பத்தி தொழில்துறையை பாதுகாப்பதற்கு பிரதான இறக்குமதி கொள்கை முக்கிய செயல் நடவடிக்கையாக இருப்பதையும் முகமட் சாபு சுட்டிக்காட்டினார்.