Latestமலேசியா

சபா தேர்தலின்போது செய்த தவறை சரவா தேர்தலிலும் செய்யாதீர்கள்; சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 22 – சபா தேர்தலின்போது செய்த அதே தவறை சரவா தேர்தல் விவகாரத்திலும் செய்துவிட வேண்டாம் என கூட்டரசு மற்றும் சரவா அரசாங்கங்களை சுகாதார நிபுணர்கள் கேட்டுக்கொண்டனர். எதிர்வரும் அக்டோபர் மாதம் சரவா மாநில தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்வதில் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படும்படி கூட்டடரசு மற்றும் மாநில அரசாங்கங்களை அந்த நிபுணர்கள் வலியுறுத்தினர்.

கடந்த ஆண்டு சபா மாநில தேர்தலுக்குப் பிறகு கோவிட் தொற்று நாடு தழுவிய நிலையல் மிகவும் வேகமாக பரவியதோடு இன்றுவரை அதன் கோரத் தாண்டவம் தொடர்வதை கருத்திற்கொண்டு முறையான சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அரசாங்கம் எப்போதும் மக்களின் சுகாதார நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் என மலேசிய மருத்துவர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் சுப்ரமணியும், தனியார் மருத்துவமனைகளின் சங்கத் தலைவரான டாக்டர் Guljit singh மற்றும் பொது சுகாதார கொள்கைக்கான Khazanah ஆராய்ச்சிக் கல்லூரியின் ஆய்வாளர் Nazihah Muhamad ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர் தேர்தல் நடத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக SOP விதிகள் கடுமையாக பின்பற்றப்படுவதோடு எல்லை கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும் .தேர்தலில்போது பிரச்சாரம் மற்றும் வாக்களிப்பு முறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அதுவும் இப்போது Covid டின் Delta வைரஸ் சரவாவில் வேகமாக பரவிவருவதால் தேர்தலை விட மக்களின் உயிருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் அறைகூவல் விடுத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!