கோலாலம்பூர், ஏப்ரல் 8 – சபா, கம்போங் பாங்கி குனாக்கிலிருந்து, வடகிழக்கு பகுதியில் 0.2 கடல் மைல் தொலைவில், நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணையில், ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, குனாக் மற்றும் சபாவின் செம்போர்னாவுக்கு பயணமான பொதுமக்களை குறி வைத்து, கடற்கொள்ளையர்கள் மேற்கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.
அந்த நீரிணைப் பகுதியை, மக்கள் பயன்படுத்துவதை சாதகமாக்கி கொண்டு, குறிப்பிட்ட கும்பல் ஒன்று அந்த தால்குதலை மேற்கொண்டதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.
இதுவரை, அச்சம்பவத்திற்கும், அண்டை நாடுகளிலுள்ள தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளதாகவும், ரஸாருடின் சொன்னார்.
அந்த தால்குதலில் ஈடுபட்ட நபர் ஒருவரை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது. அது தீவிரவாத செயல் அல்ல. கடற்கொள்ளை முயற்சி என்பதை ரஸாருடின் தெளிவுப்படுத்தினார்.
எனினும், விசாரணை நடைபெற்று வருவதால், அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த மேல் விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.