Latestமலேசியா

சபா முதலமைச்சரை மாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்ததா ?

கோத்தா கினாபாலு, ஜன 6 – சபா முதலமைச்சர் Datuk Seri Hajiji Noor- ரை மாற்றும் முயற்சி தோல்வி கண்டிருப்பதாக கூறப்படுகிறது.

‘கினாபாலு நடவடிக்கை’ என அறியப்படும் அந்த முயற்சிக்கு, மாநில வரிசான், தேசிய முன்னணி தலைவர்களின் தொடர்பு இருந்ததாக நம்பப்படுகிறது .

நேற்று மாலை, அந்த விவகாரம் தொடர்பில், வாரிசான் கட்சித் தலைவர் Datuk Seri Mohd Shafie Apdal, சபா தேசிய முன்னணி தலைவர் Datuk Seri Bung Moktar Radin இருவரும் தனித் தனியே செய்தியாளர் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

எனினும், மேற்விபரங்கள் ஏதும் வழங்கப்படாமல் அந்த இரு சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டன.

இதனிடையே, அவசியம் ஏற்பட்டால் முதலைமைச்சர் Datuk Seri Hajiji Noor – ரின் ஆதரவை நிரூபிக்க தயாராக இருப்பதாக நேற்றிரவு Gabungan Rakyat Sabah – GRS கூட்டணி கட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!