ஜோர்ஜ் டவுன், பிப் 14 – தனது 3 பிள்ளைகளை, பெர்லிசில் உள்ள சமய அதிகாரத்துவ தரப்பினர் வைத்திருப்பதாக, பினாங்கில் பெண் ஒருவர் போலீஸ் புகார் செய்திருந்த நிலையில், தற்போது அவரது பிள்ளைகள் சமூக நலத் துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சமையல் கார உதவியாளராக வேலை செய்து வரும் Loh Siew Hong-கின் பிள்ளைகள், கெடா, ஜித்ராவிலுள்ள Rumah Taman Sinar Harapan சமூக நல இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக, அரசாங்க சார்பற்ற அமைப்பான மலேசிய தமிழர் குரல் குறிப்பிட்டுள்ளது.
இன்று தனது பிள்ளைகளை சந்தித்த அந்த தனித்து வாழும் தாய், மனதளவில் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் தனது பிள்ளைகளை , நீதிமன்ற விசாரணை முடிவுறும் வரையில், சமூக நல இல்லத்தின் கண்காணிப்பில் விடுவதற்கு முடிவெடுத்திருப்பதாக , அந்த அமைப்பு கூறியது. Loh Siew Hong-கின் பிள்ளைகள் இந்து மதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.