Latestமலேசியா

சமூக ஊடகங்களில் ‘ஹீரோவாக’ வலம் வரும் நாய் ; ஆண்டுக்கு 45 லட்சம் ரிங்கிட்டை சம்பாதிக்கிறது

சமூக ஊடகங்களில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வரும் விலங்காக, Tucker Budzyn எனும் நாய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன் வாயிலாக, ஆண்டுக்கு 45 லட்சம் ரிங்கிட் வரையில் அது வருமானம் ஈட்டுவது, Printed Pet Memories நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இரண்டு வயது தொடங்கி சமூக ஊடக ‘பிரபலமாக’ வலம் வரும் Tucker-ருக்கு தற்போது வயது ஐந்து ஆகும்.

யூதியூப்பில் 30 நிமிடங்களுக்கு வலம் வர, அது ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் முதல் இரண்டு லட்சத்து 72 ரிங்கிட் வரை கட்டணத்தை பெறும் வேளை ; இன்ஸ்தாகிராமில் மூன்று முதல் எட்டு பதிவுகளுக்கு ஒரு லட்சம் ரிங்கிட் வழங்கப்படுகிறது.

கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த Tucker-ரை, டிக் டாக், முகநூல், யூதியூப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என இதுவரை இரண்டு கோடியே 50 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!