சமூக ஊடகங்களில் 100 கோடி followers-களுடன் சாதனைகளை அடித்து நொறுக்கும் GOAT கிறிஸ்டியானோ ரொனால்டோ
அங்காரா, செப்டம்பர் -14, கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சமூக ஊடகங்களில் ஒட்டுமொத்தமாக 100 கோடி பின்தொடர்பாளர்களைப் (followers) பெற்ற முதல் மனிதராகச் சாதனைப் படைத்துள்ளார்.
ஏற்கனவே Instagram-மில் 63 கோடியே 80 லட்சம் followers-களுடன் உலகச் சாதனைப் படைத்துள்ள ரொனால்டோ, அண்மையில் You Tube பக்கத்தையும் திறந்தார்.
ஒரே வாரத்தில் You Tube சாதனையாக 5 கோடி subscribers-களைப் பெற்று, அவரின் அப்பக்கம் இணையத்தையே அலற விட்டது.
39 வயது ரொனால்டோவுக்கு
Facebook-கில் 17 கோடி followers-களும், X தளத்தில் 11 கோடியே 30 லட்சம் followers-களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதியச் சாதனை குறித்து தனது X தளத்தில் பதிவிட்ட ரொனால்டோ, “போர்ச்சுகல் நாட்டின் வீதிகளில் கால்பந்து விளையாடிவன் இன்று உலக அரங்கில் நிற்கிறேன். இது உங்களால் தான் சாத்தியமானது, தொடர்ந்து சாதனைகளைக் குவிப்போம்” என இரசிகர்களுக்கு நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
உலகக் கால்பந்து அரங்கில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ரொனால்டோ, 2026 உலகக் கிண்ணத்திற்குப் பிறகே ஓய்வுப் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.