
கோலாலம்பூர், செப்டம்பர் 5 – இணைய தகவல் ஊடக சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக, மேத்தா மற்றும் கூகுள் போன்ற முன்னணி “ஆன்லைன்” இணைய தளங்களுடன், MCMC – மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம், விவாதங்களை நடத்தியுள்ளது.
அதே குறிக்கேளுக்காக, டிக் டொக்குடனும் விரைவில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக,தொடர்பு பல்லூடக ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
அந்த கூட்டத்திற்கு, தொடர்பு இலக்கவியல் அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ முஹமட் பெளசி மாட் இசா மற்றும் தொடர்பு பல்லூடக ஆணையத்தின் தலைவர் டான் ஸ்ரீ முஹமட் சலிம் பாத்தே டின் ஆகியோர் இணைந்து தலைமையேற்றனர்.
சிறார் பாலியல் வன்கொடுமை, இணைய சூதாட்டம், 3R விவகாரங்களுடன் தொடர்புடைய உள்ளடக்கங்கள், மோசடி நடவடிக்கைகள், தனிப்பட்ட தரவுகள் களவாடப்படும் விவகாரம், போதைப் பொருள் உட்பட தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்கும் நடவடிக்கைகள், போலி செய்திகளை பரப்புவது, ஏமாற்று வேலைகள் ஆகியவை தற்சமயம் பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளன.
அதனால், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும், இணைய ஒழுங்குமுறை கட்டமைப்பை மலேசியாவிலும் அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் பலிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.