Latest
சமூக ஐக்கியத்தை பாதிக்கும் விவகாரங்களில் உடனடியாக நடவடிக்கை தேவை – ஜோகூர் சுல்தான் வலியுறுத்து

ஜோகூர் பாரு, ஜன 25 – சமூக ஐக்கியத்தை பாதிக்கும் விவகாரங்களை கையாள்வதில் உடனடியாக மற்றும் பொருத்தமாக நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டுமென மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், Sultan Ibrahim Sultan Iskandar கேட்டுக்கொண்டுள்ளார். ஜோகூர் பாருவில் SMK Infant Jesus convent இடைநிலைப்பள்ளியில் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முகாம் நடத்தப்படும் என வெளியான குற்றச்சாட்டு குறித்து கருத்துரைத்தபோது Sultan Ibrahim இதனைத் தெரிவித்தார். வதந்திகளை பரப்புவோரினால் குழப்பம் மற்றும் வெறுப்புணர்வு உருவாகுவதை உடனடி நடவடிக்கையினால் தடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். ஜோகூர் பங்சா மக்கள் ஒருவர் மற்றொருவர் மீது எதிரியாக பார்ப்பதையோ அல்லது குழப்பத்திற்கு உள்ளாகுவதை தாம் பார்க்க விரும்பவில்லையென சுல்தான் Ibrahim தெரிவித்தார்.