புத்ராஜெயா, பிப் 10 – தங்களின் சமூக வலைத்தளங்கள் ஊடுருவப்படாமல் இருக்க , two-factor authentication எனப்படும் , கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை முடுக்கு விடும்படி , MCMC –மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
அந்த கூடுதல் பாதுகாப்பு அம்சத்தின் கீழ், ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, சிறப்பு பாதுகாப்பு குறியீட்டை பதிவு செய்ய வேண்டும்.
அந்த பாதுகாப்பு இருப்பதின் மூலமாக, வெளிதரப்பினர் ஒருவரது சமூக வலைத்தளத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டால் , சம்பந்தப்பட்டவருக்கு எச்சரிக்கை அனுப்பி வைக்கப்படும்.
இன்றைய இணைய யுகத்தில் , வெறும் கடவுச் சொல் ஒருவரது சமூக வலைத்தள கணக்கின் பாதுகாப்பை உறுதிச் செய்ய போதுமானதாக இருக்காது என MCMC ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது