ஜகர்த்தா, மே – சமைக்க தவறிய மனைவியை பல் துலக்கும் பிரஷினால் குத்தி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டான். 20 வயதுடைய Iwan என்ற அந்த ஆடவன் தனது 19 வயதுடைய மனைவி Risma வை இந்தோனேசியா,
Riau வில் Kerimun மாவட்டத்தில் உள்ள வீட்டில் இந்த குற்றத்தை புரிந்துள்ளான். அந்த வீட்டிற்கு மறுநாள் காலையில் வந்த Risma வின் தாயார் படுக்கை அறையில் பல் துலக்கும் பிரஷ் கழுத்தில் குத்தப்பட்ட நிலையில் அவர் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து பூலாவ்விற்கு தப்பிச் செல்ல முயன்ற Rismaவின் கணவரை அவரது காலில் சுட்டு போலீசார் கைது செய்தனர்.
முதல் நாள் இரவு 8 மணியளவில் கணவன் மனைவி இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டபோது மனைவின் கழுத்தை நெறித்த பின் பல் துலக்கும் பிரஷில் Iwan குத்தியதால் அவர் இறந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அடிக்கடி சமைக்காமலும் வீட்டு வேலை செய்யத் தவறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தினால் வஞ்சம் தீர்க்கும் வகையில் தனது மனைவியை கொலை செய்ததாக Iwan ஒப்புக் கொண்டான்.