நீலாய், பிப் 19 – நீலாய் Bandar Ainsdale க்கு அருகே வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 278.8 ஆவது கிலோமீட்டரில் சமையல் எண்ணெயை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று கவிழ்ந்ததில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது.
நேற்று மாலை மணி 6.45 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தினால் நெடுஞ்சாலையின் நான்காவது தடம்வரை சமையல் எண்ணெய் கசிவு ஏற்பட்டிருந்தது. லோரியின் பின்புற டயர் வெடித்ததைத் தொடர்ந்து அந்த லோரி கவிழ்ந்தது.