
இஸ்லாமாபாத், ஜன 4 – பொருளாதார நெருக்கடியால், பாகிஸ்தானில் மக்கள் சமையல் எரிவாயுவை , பெரிய பிளாஸ்டிக் பலூன்களிலும் பிளாஸ்டிக் பைகளிலும் நிரப்பிச் செல்லும் அளவிற்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
சமையல் எரிவாயுக்கான சிலிண்டர் கலன்கள் இல்லாதததால் , பைகளில் எரிவாயுவினை நிரப்பிச் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வலம் வரத் தொடங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்நாட்டில் சில இடங்களில் மக்கள், கடந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக , சமையல் எரிவாயு இன்றி உள்ள நிலையில், அண்மையில் அந்நாட்டு அரசாங்கம் கோதுமை, சீனி, நெய் போன்ற உணவுப் பொருட்களின் விலையையும் அதிகரித்துள்ளது. இது கீழ் நிலை மக்களை அன்றாட சாப்பாட்டுக்கே அல்லல்படும் நிலைக்குத் தள்ளியுள்ளது.