நியு யோர்க், பிப் 10 – சம்சுங் ( Samsung ) நிறுவனம், சந்தையில் தான் புதிதாக அறிவித்திருக்கும் கேலக்ஸி ( Galaxy ) வகை திறன்பேசிகள் , மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளது.
நைலான் மீன்பிடி வலைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு , கைபேசியில் ஒலி மற்றும் திறன் விசைகளை உறுதியாக பிடித்து வைத்திருக்கும் கம்பிவடமாக பயன்படுத்தப்படுகிறது.
இவ்வேளையில் தண்ணீர் போத்தல்கள், CD குறுந்தட்டுகள் ஆகியவற்றைக் கொண்டு கைபேசிக்கான பாகங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதனிடையே, சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Samsung Galaxy S22, Samsung Galaxy S22 +, Samsung Galaxy S22 Ultra ஆகிய திறன்பேசிகள், 769 யூரோவிலிருந்து 1, 499 யூரோ வரை விற்கப்படுகிறது.