கோலாலம்பூர், ஆக 11 – சம்பளப் பணம் செலவழித்ததால் மனைவி திட்டுவார் என்பதால் அப்பணத்தை இரண்டு கொள்ளையர்களிடம் இழந்ததாக பாதுகாவலர் ஒருவர் பொய் புகார் செய்தது கண்டறியப்பட்டது. புகார்தாரரான 65 வயது ஆடவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த விவகாரம் அம்பலமானதாக கெமமான் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Hanyan Ramlan தெரிவித்தார்.
தாம் புகார் செய்ததுபோல் தமது காரில் ஏறிய ரோஹின்ய ஆடவனும் அவனை இறக்கிவிட்ட இடத்திலிருந்த மற்றொரு நபரும் தம்மிடமிருந்து 1,100 ரிங்கிட்டை திருடிச் சென்றதாக செய்த போலீஸ் புகார், ஜோடிக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை என்பதை அந்த பாதுகாவலர் ஒப்புக்கொண்டார். மேலும் அந்த ஆடவர் மூன்று ஆண்டுகாலமாக தனக்கு அறிமுகமான பெண் தோழிக்கும் பணத்தை கொடுத்துள்ளதை ஒப்புக் கொண்டார். பொய் புகார் செய்த அந்நபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கெமமான் (Kemaman) மாவட்ட போலீஸ் தலைவர் தெரிவித்தார்.