Latestமலேசியா

சம்மன் பாக்கி: வாகனமோட்டும் உரிமம், சாலை வரி புதுப்பித்தலை JPJ-வால் முடக்க முடியும்

புத்ராஜெயா, பிப்ரவரி-27 – போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதத் தொகைகளைச் செலுத்தாத உரிமையாளர்கள், LMM எனப்படும் மலேசிய வாகனமோட்டும் உரிமம் மற்றும் LKM எனப்படும் மோட்டார் வாகனமோட்டும் உரிமத்தைப் புதுப்பிக்கும் போது, JPJ-வால் அதனை முடக்க முடியும்.

2012-ல் மேல் முறையீட்டு நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் படி, சாலைப் போக்குவரத்துத் துறைக்கு அந்த அதிகாரம் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் தோனி லோக் கூறினார்.

ஆக, LMM, LKM உரிமப் புத்துப்பித்தலை முடக்கும் JPJ-வின் நடவடிக்கை சட்டப்பூர்வமானதே என்றார் அவர்.

மக்களவையில் பக்காத்தான் ஹாராப்பானைச் சேர்ந்த பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாம் ( Ngeh Koo Ham) கேட்ட கேள்விக்கு அந்தோனி அவ்வாறு பதிலளித்தார்.

வர்த்தக வாகன உரிமச் சட்டமும் JPJ-வுக்கு அந்த அதிகாரத்தை வழங்குவதாக அவர் சொன்னார்.

JPJ-வின் சம்மன்களைச் செலுத்தாமலிருப்போருக்கு வாய்ப்பு வழங்கும் பொருட்டு, 3 வகையான சம்மன்களுக்கு 150 ரிங்கிட் சிறப்புக் கட்டணக் கழிவுச் சலுகை கடந்த மாதம் தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது.

ஜூன் 30-ஆம் தேதியோடு அச்சலுகை முடிவடையும் போது, சம்மன்களைச் செலுத்தாமலிருப்போரால், வாகனமோட்டும் உரிமம் மற்றும் சாலை வரியைப் புதுப்பிப்பது உட்பட, JPJ-வில் எந்தவோர் அலுவல்களையும் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

AwAS சம்மன்கள், Notis Temus Siasat, Notis Saman Tampal ஆகியவையே அம்மூன்று வகையான சம்மன்களாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!