Latestஉலகம்

சயாம் – பர்மா மரண ரயில் பாதை கட்டுமானத்தின்போது உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவுச் சின்னம் !

கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 – முறையாக பதிவு செய்யப்படாத மலாயாத் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளில் ஒன்று, சயாம் – பர்மா மரண ரயில் பாதை.

இரண்டாம் உலகப்போரின் போது கட்டப்பட்ட அந்த ரயில் பாதை திட்டம், ஒரு லட்சம் தமிழர்களின் உயிரைப் பறித்தது.
இந்த விபரத்தை அறிந்து வைத்திருக்கும் நாம், இறந்தவர்களுக்கென அடையாளமாக இதுவரை ஒரு நினைவுச் சின்னம் கூட எழுப்பப்படாதது வேதனைக்குறியதாக உள்ளது.

அச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 79 ஆண்டுகள் நெருங்கவிருக்கும் நிலையில், அந்த ரயில் கட்டுமானத்தின் போது இறந்த தமிழர்களுக்கு, முறையான நினைவுச் சின்னத்தை எழுப்பும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார் , ‘மரண ரயில் ஆர்வலர் சங்கத்தின்’ தலைவர் சந்திரசேகரன் பொன்னுசாமி .

சயாம் – பர்மா மரண ரயில் கட்டுமானத்தின் போது , போர் கைதிகளாக இருந்த பிரிட்டன், அமெரிக்க வீரர்களுக்கு , தாய்லாந்து காஞ்சனாபுரியில் கல்லறை எழுப்பப்பட்டிருக்கிறது. பர்மா, சீன தொழிலாளர்களை நினைவு கூரும் நினைவுச் சின்னமும் அங்குள்ளது. ஏற்கனவே எழுப்பப்பட்ட அதே நினைவுச் சின்னத்தில், உயிரிழந்த தமிழர்களின் பதிவும் இடம்பெறச் செய்யப்படுமென கூறியிருக்கிறார் சந்திரசேகரன்.

சயாம் -பர்மா மரண ரயில் பாதையின் வரலாற்றைக் குறிக்கும் நினைவுச் சின்னத்தில் தமிழர்களின் சுவடும் இடம் பெறச் செய்வதற்கு, பொது மக்கள் மேற்கண்ட வங்கி எண்ணில் ( CIMB Acc: 8605291226, Persatuan Prihatin Keretapi Maut Malaysia ), நன்கொடையை வழங்கலாம்.

தொடர்புக்கு : 017- 888 7221 – சந்திரசேகரன் பொன்னுசாமி
: 012- 377 9046 – கனியமுதன்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!