
கோலாலம்பூர், ஜூன் 8 – இரண்டாம் உலக போரின்போது ஜப்பானிய ஆட்சிக் காலத்தில் சயாம் மரண ரயில்வே நிர்மாணிப்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் ஒரு லட்சம் இந்தியர்கள் சயாம் காஞ்சானாபுரியில் மரணம் அடைந்தனர். . சயாம் மரண ரயில்வே நிர்மாணிப்பின்போது மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. மரண ரயில்வே ஆய்வாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சயாம் மரண ரயில் தண்டவாள நிர்மாணிப்பின்போது மரணம் அடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். காஞ்சானாபுரி மாநிலத்தின் கவர்னர் சார்பில் துணை கவர்னர் Atthisan Intra இந்த நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார். காஞ்சானபுரி சுற்றுலா வர்த்தக சங்கத் தலைவர் Surian Janpian உட்பட பல முக்கிய பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்