ஜோகூர் பாரு, பிப் 25 – மூடா, ஜோகூர் மாநிலத் தேர்தலில் அதன் தலைவர் சயிட் சாடிக் அப்துல் ராஹ்மானை களமிறக்காது.
கட்சியின் தலைவரை வேட்பாளராக இறக்குவதால் நன்மையும் அதே வேளை தீமையும் இருப்பதாக, அக்கட்சியின் தலைமைச் செயலாளர் Amira Aisya Abd Aziz தெரிவித்தார்.
நேற்று DAP கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், சயிட் சாடிக் ஜொகூர் தேர்தலில் போட்டியிட வேண்டுமென கூறியிருந்தார். ஒரு தலைவர் கட்சியை முன்னின்று வழிநடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் சயிட் ஜோகூர் தேர்தலில் போட்டியிடமாட்டார் எனும் தகவலை Amira Aisya Abd Aziz உறுதிப்படுத்தினார்.