Latestஇந்தியா

சய்னா நேவாலின் பதிவுக்கு நடிகர் சித்தார்த் ஆபாச பதிவு ; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுடில்லி, ஜன 11- பஞ்சாப்பில், பிரதமர் நரேந்திர மோடி பயணித்த வாகனம், விவசாயிகளின் மறியலால் இடைமறிக்கப்பட்டது தொடர்பில்,தேசிய பூப்பந்து வீராங்கனை சய்னா நேவால் பதிவிட்டிருந்த கருத்துக்கு, நடிகர் சித்தார்த் ஆபாசமான பதில் கருத்தினைப் பதிவிட்டிருக்கின்றார்.

முன்னதாக சய்னா நேவால், எந்த நாடும் தனது சொந்த பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், தன்னைப் பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது எனவும், பிரதமர் மோடி மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை கண்டிப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது அந்த பதிவிற்கு, சர்ச்சையான அதே வேளை ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி சித்தார்த் பதிவிட்டதைத் தொடர்ந்து, அவருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியிருப்பதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!