
கூச்சிங், மார்ச்-27- சரவாக்கில் வாழும் சீன சமூகத்துக்கு பூமிபுத்ரா அந்தஸ்து வழங்குவது பற்றி மாநில அரசு பரிசீலிக்க வேண்டுமென, ஜூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் லேரி சிங் (Larry Sng) பரிந்துரைத்துள்ளார்.
பல சரவாக்கிய சீனர்களின் மூதாதையர்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே அந்த போர்னியோ மாநிலத்தில் வாழ்ந்ததாகவும், அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் அன்றிலிருந்து சரவாக்கில் தங்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
இன அமைப்பு, மத பன்முகத்தன்மை மற்றும் சில பகுதிகளில் சுயாட்சி ஆகியவற்றில் சரவாக்கின் தனித்துவத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு மாநிலமாக இல்லாமல் ஒரு பிராந்தியமாக இருப்பதன் மூலம், சீன வம்சாவளியைச் சேர்ந்த சரவாக்கியர்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்தை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
அவர்களில் பெரும்பாலோர் இந்த நாட்டிலேயே பிறந்து, சேவை செய்து, போராடி, தியாகம் செய்து, மாநிலத்தின் பொருளாதார நல்வாழ்வுக்கு மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளதாக, பங்சா மலேசியா கட்சியின் தலைவருமான லேரி கூறினார்.
மாநிலத்திற்கும் அதன் அனைத்து மக்களின் நலனுக்காகவும் இப்பரிந்துரையை நன்கு பரிசீலித்து, அரசாங்கம் அதனை சட்டமாக இயற்றும் என தாம் நம்புவதாக, facebook பதிவில் அவர் கூறினார்.
சீன மற்றும் ஒராங் உலு கலப்பினப் பெற்றோருக்குப் பிறந்த தனது ஊழியர்களில் ஒருவருக்கு, 48 வருட காத்திருப்புக்குப் பிறகு நேற்று பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கப்பட்டதையும் லேரி சுட்டிக் காட்டினார்.