கூச்சிங், ஆகஸ்ட் -23, சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பாட்டத்தின் ஒட்டுமொத்த வெற்றியாளராக பேராக் வாகை சூடியது.
6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை பேராக் சிலம்பக் குழு குவித்திருக்கிறது.
3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் பினாங்கு இரண்டாமிடத்தைப் பிடித்தது.
3 தங்கம் 4 வெண்கலம் ஆகியவற்றுடன் திரும்பும் சிலாங்கூர் மூன்றாவதாக வந்தது.
இந்தியர்களின் தற்காப்புக் கலையான சிலம்பப் போட்டியில் முதன் முறையாகப் பங்கேற்ற உபசரணை அணியான சரவாக் 2 வெள்ளிப் பதக்கங்களையும் 1 வெண்கலத்தையும் வென்று அதிரடி படைத்தது.
சுக்மா போட்டியின் சிலம்பாட்டங்கள் இன்றோடு முடிவுக்கு வந்துள்ளன.