Latestமலேசியா

சரவாக் மாநிலத் தேர்தல்; 82 இடங்களுக்கு 349 வேட்பாளர்கள் போட்டி

கூச்சிங், டிச 6 – சரவாக் மாநிலத் தேர்தலில், 82 சட்டமன்ற தொகுதிகளுக்கு, மொத்தம் 349 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக , தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அம்மாநில தேர்தலில், அனைத்து 82 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சியாக GPS சரவாக் கட்சிகளின் கூட்டணி திகழ்வதாக, தேர்தல் ஆணையத் தலைவர் Abdul Ghani Salleh தெரிவித்தார்.

அம்மாநில தேர்தலில் மொத்தம் 10 கட்சிகள் போட்டியிடும் நிலையில், 30 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களில் 95 பேர் 50 வயதுக்கு கீழ்பட்டவர்கள் ஆவர். 121 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என Abdul Ghani Salleh தெரிவித்தார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!