கூச்சிங்,மார்ச் 1 – சரவாக் முதலமைச்சர் பொறுப்புக்கான பெயர் இன்று முதல் ‘ Premier Sarawak’ என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கண்டுள்ளது.
அந்த பெயர் மாற்றத்திற்கு ஏற்ப சரவாக் முதலமைச்சர் அலுவலகம் இனி சரவாக் Premier அலுவலகம் என அழைக்கப்படுமென, அம்மாநில அரசாங்க செயலாளர் Datuk Amar Jaul Samion தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 15 -ஆம் தேதி, முதலமைச்சர் பொறுப்புக்கான பெயரை ‘Premier’ என மாற்றும் தீர்மானம், சரவாக் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.