Latestமலேசியா

சர்ச்சைகுரியவரை தூதராக நியமிக்க வேண்டுமா ?

கோலாலம்பூர், மே 20 – Pasir Salak நாடாளுமன்ற உறுப்பினரான Tajuddin Abdul Rahman சர்ச்சைக்குரியவராக இருக்கும்போது அவரை பிரதமர் Ismail Sabri இந்தோனேசியாவுக்கான தூதராக நியமிக்க வேண்டுமா என பெயர் குறிப்பிட விரும்பாத அம்னோ தலைவர் ஒருவர் கேள்வி எழுப்யுள்ளார். உண்மையில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஒருவரை தூதர் பதவிக்கு நியமித்திருக்க வேண்டும் என அந்த தலைவர் வலியுறுத்தினார். நம்பிக்கையான ஒருவரை தூதர் பதவிக்கு பிரதமர் தேர்வு செய்துள்ளார் என்பது புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தாலும் தாஜூடினிடம் வேறு சிறப்பு அம்சம் எதுவும் இல்லையென அந்த அம்னோ தலைவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே தாஜூடின் தூதராக நியமிக்கப்பட்டது மலேசியாவின் உள்விவகாரம் என்பதால் அந்த விவகாரத்தில் இந்தோனேசிய அரசாங்கம் தலையிட விரும்பவில்லையென அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!