தீயோடு விளையாடாதே என்பார்கள். ஆனால் வேலையே தீயோடு என்றால் எப்படி? அவ்வளவு ஆபத்தான சவால்களை எதிர்நோக்கி பொருள்சேதம் மற்றும் உயிர்ச்சேதங்களைத் தவிர்க்க தினமும் போராடும் தீயணைப்பு வீரர்களை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம்.
இந்த சவால் மிக்க பணியில் சேர உங்களுக்கு விருப்பமா?
ஒரு காலத்தில் இது ஆண்களுக்கான வேலை என மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பெண்களும் இதில் தங்களின் திறமையையும் தைரியத்தையும் காட்டும் களமாக மாறியுள்ளது என்கிறார் கெடா தீயணைப்பு மீட்புத் துறையின் துணை அமலாக்க அதிகாரி ஹேமநாதன்.
பலரும் பொதுவாக நினைப்பது போல் தீயை மட்டுமே அணைப்பது தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் வேலை இல்லை என்கிறார் ஹேமநாதன்.
விபத்தில் சிக்கியவர்கள், ஆபத்தான விலங்குகளைப் பிடித்தல், அவசர நிலைகளில் இருப்பவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் செயல்களும் இத்துறையில் அடங்கும் என்றார், இவர்.
அவ்வகையில், அவரின் சில அனுபவங்களையும் வணக்கம் மலேசியாவிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
தீயணைப்பு வீரர்களின் வீரியம், வேகம் மற்றும் கடுமையான வேலைகள், பலரின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக உறுதுணையாக உள்ளன.
இருப்பினும், தீயணைப்பு வீரர்களின் மீது அவ்வப்போது சில குற்றச்சாட்டுகள் முன்வைப்பதும் உண்டு.
அதில் ஒன்றாக, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு தாமதமாக வருவதும் அடங்கும்.
இதற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது……
ஒரு காலகட்டத்தில் அதிகமான இந்தியர்கள் இத்துறையில் தனித்தன்மையாக பீடு நடை போட்டு வந்திருக்கின்றனர்.
ஆனால், தற்போது அவ்வெண்ணிக்கைக் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு குறைந்துள்ளது.
எனினும், இளைஞர்கள் பலர் தற்போது, இத்துறையில் இணைவதற்கு முனைப்புக் காட்டி வருவதாக ஹேமநாதன் தெரிவித்தார்.
அதற்கான அடிப்படைத் தகுதிகளையும் இவ்வாறு விளக்கினார்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முன்னேற்பாடுகளைச் செய்துக் கொள்வது அவசியம் என்று ஹேமநாதன் வலியுறுத்தினார்.