ரியாட்,பிப் 18 – பழைமைவாய்ந்த முஸ்லீம் கொள்கைகளால் பெண்களுக்கு அதிகம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் சவூதி அரேபியாவில், அதிவேக ரயிலை ஓட்டும் பணிக்கு பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
முதல் முறையாக அத்தகைய வேலைக்கான விளம்பரம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், 30 பெண் ஓட்டுநர்களுக்கான வேலைக்கு, 28,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அந்த வேலைக்கு தேர்வாகும் பெண்கள் , ஓராண்டு பயிற்சிக்குப் பின்னர் புனித நகர்களான மெக்கா, மெடினா இடையில் அதிவேக ரயிலை ஓட்டும் பணியை ஏற்பார்கள்.