Latestஉலகம்

சவூதி அரேபியாவின் முதல் விண்வெளி வீரர் திட்டம்

செப் 23- சவூதி அரேபியா முதல் முறையாக, விண்வெளி வீரர் திட்டத்தை தொடங்கியுள்ளது.

அத்திட்டத்தின் வாயிலாக, அடுத்தாண்டு பெண் ஒருவரை முதல் முறையாக, அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்ப முடியுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மனிதகுல மேம்பாட்டிற்கு வித்திடும், அறிவியல் ஆய்வு நடவடிக்கைகளில், சவூதி அரேபியா விண்வெளி வீரர்கள் கால் பதிக்க அத்திட்டம் வழிகோலுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, சுகாதாரம், சுற்றுசூழல் மேம்பாடு, விண்வெளி அறிவியல் துறைகளில் அவர்களால் பங்களிப்பை வழங்க முடியுமென பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு, 2030 தூரநோக்கு திட்டத்தின் வாயிலாக, சவூதி அரேபியாவின் விண்வெளி வீரர்களை, அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பும் இலக்கையும் எளிதாக எட்டி விட முடியுமென நம்பப்படுகிறது.

அந்த முதல் குழுவில் பெண் விண்வெளி வீரர் ஒருவரும் இடம்பெறவுள்ள வேளை, அவரது விவரங்களை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!