
மேற்கு சவூதி அரேபியாவிலுள்ள, சில பாலைவனங்கள் பச்சை பசேல் என காட்சி அளிக்கும் செயற்கைகோள் படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி, ரியாத்திலுள்ள சில பகுதிகளில், மழையுடன், ஆழங்கட்டி மழையும், பனிப்பொழிவும் ஏற்பட்டது.
அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு ஏற்பட்ட அந்த மழைப்பொழிவு நீண்ட நாட்கள் நீடித்த வேளை ; கிட்டத்தட்ட நிலையான விகிதத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, வளிமண்டலம் உறுதியற்ற நிலையில் இருந்ததன் விளைவாக, தொடர்சியான, முற்றிலும் மாறுபட்ட வகையில் அடை மழை பெய்ததால், மக்காவிலும், மதீனாவிலுமுள்ள பாலைவனங்களில் தாவரங்கள் துளிர் விடத் தொடங்கியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின், புவி கண்காணிப்பு அமைப்பின், Sentinel-2 செயற்கைகோளும் அந்த அபூர்வமான படங்களை பதிவுச் செய்து வெளியிட்டுள்ளது.