Latestஉலகம்

சவூதி அரேபிய பாலைவனத்தில் GPS சொதப்பியது; இந்தியப் பிரஜையும் அவரது நண்பரும் பரிதாப மரணம்

ஜெடா, ஆகஸ்ட்-26 – தென்னிந்திய மாநிலம் தெலங்கானாவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் Shezad, சவூதி அரேபியாவின் ரப் அல் காலி (Rub’ al Khali) பாலைவனத்தில் சிக்கித் தவித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரும் சூடானைச் சேர்ந்த நண்பரும் வாகனத்தில் அங்குச் சென்றிருந்த போது நடுவழியில் GPS  செயலிழந்து வேலையைக் காட்டியது.

இதனால், எங்கே செல்வது எப்படி செல்வதென்று தெரியாமல் இருவரும் குழம்பிப் போயுள்ளனர்.

அந்தச் சமயம் பார்த்து கைப்பேசி பேட்டரியும் தீர்ந்துப் போயிருந்தது.

இதனால் அவர்களால் உதவிக்கும் யாரையும் அழைக்க முடியவில்லை.

அவர்கள் ஓட்டிச் சென்ற வண்டியில் எரிபொருளும் தீர்ந்துள்ளது.

கடைசியில் பாலைவன வெப்பத்தில் அலைந்து திரிந்து  உணவு, தண்ணீரின்றி தவித்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்கள் காணாமல் போனதையடுத்து, உடன் பணியாற்றும் தொலைத் தொடர்பு நிறுவன ஊழியர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு இருவரின் உடல்களும் பாலைவனத்தில் மீட்கப்பட்டன.

அவர்களின் இறப்புக்கு, உடலில் ஏற்பட்ட கடுமையான நீரிழப்பு (dehydration)  மற்றும் தாளாத சோர்வு காரணமாகக் கூறப்படுகிறது.

சுமார் 650 கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்து கிடக்கும் இந்த ரப் அல் காலி பாலைவனம், உலகிலேயே மிகவும் ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!