
கோலாலம்பூர், மார்ச் 19 – மக்களுக்காக தகவல்களை வழங்குவது மட்டுமல்லாமல் , அவர்களின் துயரத்திலும், பகிர்ந்து கொள்வதை கடப்பாடாகக் கொண்டுள்ளது மின்னல் எஃப்.எப் பண்பலை.
மக்களுடன் இணைந்து மக்களுக்காக உதவிக் கரம் நீட்டும் முயற்சியில் தற்போது அந்த பண்பலை ஈடுபட்டுள்ளது.
ஜோகூர் செகாமாட் , Chaah- வில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மின்னல் எஃப். எம் உதவிப் பொருட்களை சேகரித்து அனுப்பியிருக்கிறது.
முன்னதாக , அங்காசாபுரி முன்புறம் பொது மக்கள் தாங்க வாங்கிய உதவிப் பொருட்களை கொண்டு வந்து சேர்த்தனர்.
அரிசி, உணவுப் பொருட்கள், மின்னியல் சாதனங்கள், உட்பட மேலும் பல அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களை நேயர்கள் கொடுத்து உதவினர்.
நேயர்கள் வழங்கிய உதவிப் பொருட்கள் இன்று பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையும். பிப்ரவரி மாத இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஜோகூரில் முக்கியமாக பாதிக்கப்பட்ட இடங்களில் Chaah- வும் ஒன்று. இப்பகுதியில் அதிகமான இந்தியர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மனிதநேய நடவடிக்கையில் , மின்னல் எஃப். எம்-முடன் இணைந்து உதவிக் கரம் நீட்டிய அனைவருக்கும் அப்பண்பலை நன்றி தெரிவித்துக் கொண்டது.