கோலாலம்பூர், மார்ச் 3 – தாயகத்தில் உயிர் மருட்டலை எதிர்நோக்கியிருப்பதாகக் கூறியிருக்கும் வங்காளதேசத்தின் மலேசியாவுக்கான முன்னாள் தூதர் Mohammed khairuzzaman , சமய போதகர் Zakir Naik –கிற்கு வழங்கப்பட்டது போன்று தமக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுமென எதிர்ப்பார்ப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவிடம் தாம் ஒப்படைக்கப்பட்டால் தமது உயிருக்கு ஆபத்து இருக்கலாம் என சாகிர் கூறியதை அடுத்து அவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.
அதேபோன்றதொரு சூழலில் தான் நானும் இருக்கிறேன். எனவே தமக்கும் அந்த சலுகை கிடைக்குமென நம்புவதாக தற்போது மலேசியாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் Mohammed khairuzzaman குறிப்பிட்டுள்ளார்.