
கோலாலம்பூர் , செப் 1 – கோலாலம்பூரிலிருந்து தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் சென்றடைந்த பயணி ஒருவர் வைத்திருந்த Nuteela சாக்லெட் போட்டலில் தங்கக் கட்டி இருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
890,000 ரூபாய் அல்லது 50,000 ரிங்கிட் மதிப்புடைய அந்த தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.
149 கிரேம் கொண்ட அந்த தங்கக் கட்டியை இந்திய வான் உளவு பிரிவு கண்டுப்பிடித்தாக Economic Times தகவல் வெளியிட்டது.
சீல் செய்யப்பட்டிருந்த Nutella போட்டலில் அந்த தங்கக் கட்டி தூளாக்கப்பட்டு கலக்கப்பட்டிருந்ததை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
சுங்க சட்டத்தின் 104ஆவது விதியின் கீழ் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.