Latestமலேசியா

சாத்தே சாப்பிட அழைத்து இளம் பெண் கற்பழிப்பு மூவர் கைது

கோலாலம்பூர், ஆக 17- சாத்தே சாப்பிட அழைத்துச் செல்வதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். டமன்சாரா டாமாயில் நடந்த இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட
19 வயது பெண்ணும் அவரது குடும்பத்தினரும் ஸ்ரீ டமன்சாரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதை பெட்டாலிங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Superintendent Ku Mashariman உறுதிப்படுத்தினார். தமக்கு அறிமுகமான இளைஞன் சாத்தே சாப்பிட அழைத்தால் அதிகாலை ஒரு மணியளவில் அந்த இளைஞரின் வீட்டிற்கு அப்பெண் சென்றுள்ளார். அங்கு சம்பந்தப்பட்ட இளைஞனும் மேலும் இருவரும் சேர்ந்து அப்பெண்ணை கற்பழித்ததோடு அவரை தலைக் கவசத்தினால் தாக்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!