
வாஷிங்டன், டிச 15 – அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபலமாட் Golden Gate ( கோல்டன் கேட்) தொங்கும் பாலத்திலிருந்து கீழே குதித்து 16 வயது இந்தியச் சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். சான் பிரான்சிஸ்கோ நகரத்தின் அடையாளக் சின்னமாகவும் திகழும் அந்த பாலத்திலிருந்து இந்திய அமெரிக்கர்கள் சம்பந்தப்பட்ட நான்காவது தற்கொலைச் சம்பவம் இதுவாகும் என அமெரிக்க சமூகத் தலைவர் Ajay Jain Bhutoria தெரிவித்தார். அந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1937 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட அந்த தொங்கும் பாலத்திலிருந்து இதுவரை ஈராயிரத்திற்கும் மேற்பட்டோர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அந்த சிறுவனின் சைக்கிள், அவனது செல்போன், கைப்பை ஆகியவவை அந்த பாலத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. மாலை மணி 4.58 அளவில் அந்த சிறுவன் தொங்கும் பாலத்திலிருந்து குதித்ததை பொதுமக்கள்ளில் சிலர் பார்த்துள்ளனர். இரண்டு மணி நேரம் தேடும் நடடிக்கைக்குப் பின் அச்சிறுவனின் உடலை போலீசார் கண்டுப்பிடித்தனர்.