
பெட்டாலிங் ஜெயா, மே 6 – பொதுச் சேவைத் துறையில் வேலை செய்பவர்கள் சக ஊழியர்களை “சாயாங்” & “டியர்” என்று கூப்பிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறது பொதுச் சேவைத் துறை.
ஆபாச வீடியாக்கள், படங்கள், வார்த்தைகளைத் தவிர இந்த இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் பாலியல் தொல்லையாக வகைப்படுத்தப்படும் என அத்துறை புதிய சுற்றரிக்கை வெளியிட்டுள்ளது.
சக ஊழியர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அத்துறை கூறியுள்ளது.
இதுபோன்ற தொல்லைகளை அரசாங்க அதிகாரிகள் யாரேனும் எதிர்நோக்கினால் உடனடியாக புகார் செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.