ஐதராபாத், ஆகஸ்ட் 23 – ஹைதராபாத் அருகே சாலையில் ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசிய யூடியூபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் (reels) வீடியோ பதிவு செய்வதற்காகவும், likes-களை பெறுவதற்காகவும் சிலர் அத்துமீறி risk எடுத்து வருகின்றனர்.
அதில் சிலர் கிறுக்குத்தனமான செயல்களையும் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் யூடியூபர் ஒருவர் பணத்தை தூக்கி வீசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில் மக்கள் பணத்தைப் பிடிக்க விரைந்து ஓடுவதை காணமுடிகிறது. இதனால், அங்கு கடும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது மட்டுமல்லாது விபத்து அபாயமும் ஏற்பட்டது.
அந்த காணொளியின் முடிவில், அந்த யூடியூபர் தனது telegram சேனலை பார்வையாளர்களை பின்தொடரவும் ஊக்குவித்துள்ளார்.
அடுத்து இதுபோன்று பணத்தைத் தூக்கி வீசும் இடங்கத்தைத் துல்லியமாக கூறினால், வெகுமதி கொடுப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார்.
இதனிடையே, இப்படி செயல்படுவோருக்கு எதிராக ஹைதராபாத் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.