புத்ராஜெயா, மே-10, புத்ராஜெயாவில் சாலையின் நடுவே கும்பலாக சைக்கிளோட்டிச் சென்றவர்கள், நெட்டிசன்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அச்சம்பவம் நேற்று காலை 7.30 மணியளவில் நிகழ்ந்ததாக வைரலான காணொலியில் தெரிகிறது.
பின்னால் வந்த காரோட்டி அவர்களின் அச்செயலைப் பதிவுச் செய்துள்ளார்.
அப்பொறுப்பற்றச் செயல் அவர்களுக்கு மட்டும் ஆபத்தை ஏற்படுத்தாது, சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தாய் போய் முடியலாம் என நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர்.
சைக்கிளோட்டுவது ஆரோக்கியமானது தான் ; ஆனால் அதற்கென்று இடம் பொருள் ஏவல் பார்க்காமால் செயல்பட்டால் எப்படி என நெட்டிசன்கள் கேள்விக் கேட்கின்றனர்.
இது பற்றி அதிகாரத் தரப்பிடம் புகார் ஏதும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவலேதும் இல்லை.