கேமரன் மலை, பிப் 12 – சாலையின் நடுவில் புலியைக் கொண்டு தாம் அதிர்ச்சியில் உறைந்ததாக கட்டுமான குத்தகையாளராக 63 வயதுடைய சைட் அலி தெரிவித்தார். வாகனத்தில் அமர்ந்திருந்தாலும் நேருக்கு நேர் புலியை பார்த்த அதிர்க்சியிலிருந்து தாம் இன்னும் மீளவில்லையென அவர் கூறினார். தானா ராத்தா நகருக்கு சென்று கொண்டிருந்தபோது புலியை நேருக்கு நேர் பார்த்த பயங்கர அனுபவம் கிடைத்தாக சைட் அலி தெரிவித்தார்.
ஒரு வளைவைக் கடந்தவுடன் சாலையின் நடுவில் புலி அமர்ந்திருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் மிரண்டு போனேன். வாகனத்தின் கண்ணாடியை முழுமையாக மூடிவிட்டு அப்படியே அமர்ந்திருந்தேன்.
புலி நகரவில்லை. எனது வாகனத்திற்கு முன் அப்படியே 10 நிமிடம் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு புலி இருந்தது. எனது இடுப்பு அளவுக்கு உயரமாக இருந்த அந்த புலி காட்டிற்குள் சென்றுவிட்டது. பிறகு அங்கு வெளியேறிய தாம் அருகேயுள்ள பூர்வகுடிகள் குடியிருப்பு பகுதிக்கு சென்று புலி நடமாட்டம் குறித்து எச்சரித்ததாக சைட் அலி கூறினார்.