
கோலாலம்பூர், ஜூலை 21 – நேற்று தலைநகர், கம்போங் பண்டான் சாலையில் பயணித்த பெண் ஒருவரின் கார் மீது ஏறிய அடையாளம் தெரியாத ஆடவன் ஒருவனால் திகிலூட்டும் அனுபவத்தை பெற்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியது.
அது குதித்து காணொளியை வெளியிட்டிருந்த லியான எனும் அப்பெண், தனது பதிவில் பயத்தில் இருந்த தனக்கு திடிரென இந்தியர் ஒருவர் உதவியதாக குறிப்பிட்டுருந்தார். அவர் யாரென்று தெரியாத நிலையில், அவசரத்துக்கு தனக்கு உதவிய அவருக்கு தன்னால் நன்றி சொல்ல முடியாமல் போய் விட்டதாக கூறியிருந்தார்.
மேலும், அவர் யாரென்று தெரிந்தால் தம்மிடம் அவருடைய விவரத்தையிம் கூறும்படியும் கேட்டு கொண்டிருந்தார்.
அப்பெண்ணுக்கு ஏற்பட்டிருந்தது அதிர்ச்சியான சம்பவம் என்றாலும், இதுபோன்ற சம்பவங்களில்தான் மலேசியர்களின் ஒற்றுமையும் மனித தன்மையும் வெளிப்படுவதாக சிலர் கருத்துரைத்துள்ளனர்.