பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 19 – மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் எறிந்த இரும்பு சுத்தியினால், பெண் ஒருவர் ஆபத்தான சூழலை எதிர்நோக்கி, அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலான இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளின் வழி, பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனத்தை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் முந்தி செல்வதைப் பார்க்க முடிகிறது.
பின்னர், சற்று மோட்டாரை மெதுவாக்கி, இரும்பு சுத்தியல் ஒன்றை எறிந்து விட்டு, அந்த ஆடவர் மீண்டும், வேகமாக மோட்டர் ஓட்டிச் செல்வதையும் காண முடிந்தது.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், இச்சம்பம் குறித்து கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விரைவிலேயே அந்த ஆடவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் இச்செயலால் விபத்துகளும் சாலை பயனர்களுக்கு ஆபத்துகளும் விளையும் எனக் கடிந்து வருகின்றனர்.
இன்னும் சில இணையவாசிகளோ, இது பணம் சம்பாதிக்கும் திட்டம். விபத்து நடந்தால், காரை இழுத்துச் செல்வதற்குப் பணம் கிடைக்கும் எனவும் பதிவிட்டு உள்ளனர்.