ஜெலெபு, பிப் 7 – நெகிரி செம்பிலான், Petaseh அருகே, Jalan Kuala Klawang –Simpang Pertang சாலையில், இறந்து கிடந்த தாபிர் (Tapir) விலங்குடன் மோதி, காரொன்று தலைகீழாக கவிழ்ந்தது. இன்று காலை மணி 7.50-க்கு நிகழ்ந்த அந்த சம்பவத்தில் , Perodua Axia காரை ஒட்டிய 60 வயது மதிக்கத்தக்க முதியவரும், 20 வயது மதிக்கத்தக்க பெண்ணும் காயமடைந்தனர்.
காரோட்டிக்கு முகத்தில் காயமடைந்த வேளையில், பெண்ணுக்கு கால் உடைந்ததாக ஜெலெபு தீயணைப்பு மீட்பு படையின் தலைவர் Mohd Fazzil Yunus தெரிவித்தார். இறந்து கிடந்த 100 கிடோ எடையிலான Tapir விலங்கு, ஏற்கனவே லாரியால் மோதப்பட்டதாக நம்பப்படுகிறது.