
பாசிர் மாஸ், மார்ச் 7 – சாலையோரத்தில் கைவிடப்பட்ட காரில் இருந்து , PGA –பொது நடவடிக்கை குழுவினர் 495 கிலோகிராம் ஷாபு போதைப் பொருளை கைப்பற்றினர்.
கிளந்தான், பாசிர் மாஸ், Kampung Pohon Buluh பகுதியில், 1 கோடியே 78 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள அந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக, கிளந்தான் போலீஸ் தலைவர் Datuk Muhammad Zaki Harun தெரிவித்தார்.
அதிகாரத்துவ தரப்பின் வருகையை அறிந்து கொண்டு, போதைப் பொருள் இருந்த அந்த காரை சாலையிலேயே கைவிட்டு விட்டு , சம்பந்தப்பட்டவர்கள் ஓடியிருக்கலாமென அவர் கூறினார்.