கோத்தா பாரு, பிப் 24 – விடிய விடிய சாலையில் சுற்றித் திரிந்த 20 மாடுகள் மற்றும் 18 ஆடுகளை கோத்தாபாரு மாநாகர் மன்ற அதிகாரிகள் பிடித்துச் சென்றனர்.
சாலையை பயன்படுத்தும் மற்றவர்களின் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருந்ததைத் தொர்ந்து அந்த கால்நடைகள் பிடித்துச் செல்லப்பட்டதாக கோத்தா பாரு மாநகர் மன்ற அமலாக்க பிரின் தலைவர் Mohamad Halimie Md Salleh தெரிவித்தார்.
மாலை 6 மணி முதல் விடியற்காலைவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு 2,000 அபராதம் விதிக்கப்படும். அந்த கால்நடைகளை பெற்றுச் செல்லாவிட்டால் அவை பொதுமக்களுக்கு ஏலமிடப்படும் என Mohamad Halimie Md Salleh கூறினார்.