
அம்பாங், ஜன 24 – அவ்வப்போது பொதுவில் சில விலங்குகளின் நடமாட்டம் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் , சாலையில் 3 குதிரைகள் சுற்றித் திரிந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இத்தகைய அரிய காட்சியை, கோலாலம்பூர், புக்கிட் அம்பாங்கில் ( Bukit Ampang) காண முடிந்த வேளை, கேட்பாரற்று சாலையில் அந்த குதிரைகள் திரிந்ததைக் கண்டு , சம்பந்தப்பட்ட அந்த பிராணிகளின் உரிமையாளரை , சமூக வலைத்தளவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அந்த இரண்டு குதிரைகளில் ஒன்று, மிகச் சோர்வான நிலையில் சாலை தடுப்பின் ஓரத்தில் படுத்து கிடந்ததைக் கண்டு, இதைக் கவனிக்காது அவற்றின் உரிமையாளர் எங்கே சென்றார், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலைத்தளவாசிகள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இவ்வேளையில் , அந்த குதிரைகள் போலீஸ் படையின் குதிரைப் பிரிவினர் காப்பாற்றியிருப்பதாக நம்பப்படுகிறது.