கோலாலம்பூர், செப்டம்பர்-20 – Mat Rempit எனப்படும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வரும் மகனின் செயலால் பொறுமையிழந்த தந்தை, அவனது மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்து கொளுத்திய வீடியோ வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
“சாலையில் மற்றவர்கள் கையால் நீ செத்து ‘மடிவதற்கு’ முன், உன்னை (மோட்டார் சைக்கிள்) நானே கொல்கிறேன். நானே உன்னை எரித்து விடுகிறேன்” என கடும் சினத்தில் தந்தை கூறவதை வீடியோவில் கேட்க முடிகிறது.
Mat Rempit-டாக சுற்றுவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என எத்தனை முறையும் சொல்லியும் மகன் கேட்காததால், தந்தை விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டதை, வீடியோவைப் பார்த்தால் தெரிகிறது.
நெட்டிசன்களும் அவ்வாடவரை கொண்டாடி வருகின்றனர்.
பெற்றோரின் பேச்சைக் கேட்காத பிள்ளைகளுக்கு இது தேவைதான்.
நீங்கள் தான் ‘இவ்வாண்டின் சிறந்த தந்தை’ என்றெல்லாம் நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.