
கோலாலம்பூர் , ஆக 22 – கோலாலம்பூர் ஜாலான் சைட் புத்ராவில் தனது காரை ஓட்டிச்சென்றபோது தன் கண் முன்னே நிகழ்ந்த விபத்து ஒன்று குறித்து Dashcamமில் பதிவான காணொளியை பயணர் ஒருவர் பதிவிட்டிருந்தது வைரலாகியுள்ளது.
பஸ்கள் செல்லும் தடத்தில் கார் ஒன்று சென்றதை தொடர்ந்து, சம்பந்தட்ட கார் ஒட்டுனரை மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சுட்டிக் காட்டுவதும், அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கிடையே வாய்ச்சண்டை எழுவது போல அக்காணொளியில் தெரிகிறது.
அதன் பின் அந்த காரோட்டி வேகமாக தமது காரை சாலையின் வலது புறத்திற்கு திருப்பி, திடிரென பிரேக் வைத்ததால், ஏற்கனவே வலது புறத்தில் இருந்த மோட்டார் ஓட்டி அந்த காரில் மோதி கீழே விழுகிறார்.
இச்சம்பவத்தில் வாய்ச்சண்டையின் போது யார் மீது குற்றம் என்பது தெரியவில்லை, ஆனால் வலதிலிருந்து இடதிற்கோ அல்லது இடதிலிருந்து வலதிற்கு நுழையும் காரோட்டிகள் சற்று கவனத்துடன் செயல்படுவது அவசியம். அதே சமயத்தில் பிரேக் வைக்கும் போது பின்புறத்தில் இருக்கும் வாகனங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இல்லையேல் ஆந்தை பிற வாகனங்களுக்கும் மோட்டார் ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என இக்காணொளியைப் பார்த்த வலைத்தளவாசிகள் கூறியுள்ளனர்.