
அம்பாங் ஜெயா, டிச 29 – பெண் பயணி ஒருவர் காரிலிருந்து சாலையில் தூக்கியெறியப்பட்ட விபத்துக்கு காரணமான, பகுதி நேர நடிகரைப் போலீசார் கைது செய்தனர். அந்த விபத்து சிலாங்கூர், Hulu Kelang அருகில் MRR2-மத்திய சுற்றுவட்டசாலையில் நிகழ்ந்த வேளை, அதன் தொடர்பான காணொளி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் அதிகம் வலம் வரத் தொடங்கியது.
விபத்தின் போது, பெரோடுவா மைவி காரை ஓட்டியிருந்த அந்த பகுதி நேர நடிகர், சாலையில் தூக்கியெறியப்பட்ட பெண்ணான தனது காதலியுடன் காரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாக, அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Mohamad Farouk Eshak தெரிவித்தார். சம்பவத்தின் போது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், Toyota Innova காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக அவர் கூறினார்.