Latestமலேசியா

சாலையில் விழுந்த மோட்டார் சைக்கிளோட்டியை இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியது; சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது

சுங்கை பட்டாணி, டிசம்பர்-20, கெடா, சுங்கை பட்டாணியில் மோட்டார் சைக்கிள் தடம்புரண்டு சாலையில் விழுந்த ஆடவரை, இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியதில், தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தெற்கு நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையின் 95-வது கிலோ மீட்டரில் நேற்று காலை 7 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.

மரணமடைந்தவர், 25 வயது Mohamad Mizam Ali என போலீஸ் அடையாளம் கூறியது.

மோதிய மோட்டார் சைக்கிளோட்டி கை கால்களில் சிராய்ப்புக் காயமடைந்து சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமானையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மரணமடைந்த இளைஞரின் உடலும் சவப்பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

அச்சம்பவம் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!