Latestமலேசியா

சாலையில் வீலிங் சாகசம்; வைரலான மோட்டார் சைக்கிளோட்டி காவல் துறையிடம் சிக்கினான்

தெலுக் இந்தான், ஆக்ஸ்ட் 27 – சாலையில் வீலிங் சாகசம் புரிந்து வைரலான மோட்டார் சைக்கிளோட்டியை, நேற்று கீழ் பேராக் காவல் துறை கைதுச் செய்துள்ளது.

15 வயது அவ்விளைஞர் தெலுக் இந்தான் PPR flat-யின் முன்புறச் சாலையில் அந்த ‘வீர’ சாகசத்தைப் புரிந்ததாக கீழ் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவரும் உதவி ஆணையருமான அகமட் அட்னான் பஸ்ரி (Ahmad Adnan Basri) கூறினார்.

பொது சாலைகளில் ஆபத்தை விளைவிக்கும் பொறுப்பற்ற முறையில் வாகனமோட்டியதன் பேரில் 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதனிடையே உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு வாகனம் ஓட்டுவது தொடர்பான எந்தவொரு தவறான நடவடிக்கையிலும் காவல்துறை சமரசம் செய்யாது என்று அஹ்மட் அட்னான் (Ahmad Adnan) நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!